தமிழகத்தில் ஸ்டார்ட்-அப் கொள்கையை கொண்டு வர வேண்டும் - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சுமார் 40 நிமிடங்கள் வரை சந்தித்த சுரேஷ் பிரபு, தொழில், வர்த்தக முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது
தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ஸ்டார்ட்-அப் கொள்கையை கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்..
"தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தில் மேலும் பல தொழிற்பூங்காக்களை உருவாக்குவது குறித்தும் ஆலோசித்தேன். 'ஸ்டார்ட்-அப்' கொள்கையை கொண்டு வருமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். 'ஸ்டார்ட்-அப்' கொள்கையால் பல நன்மைகள் உண்டு. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்களின் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும். திருப்பூர், முக்கிய ஏற்றுமதி நகரமாக உள்ளது. திருப்பூர் போன்ற ஏற்றுமதி நகரங்களை மேம்படுத்த முடிவெடுத்துள்ளோம்." - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு