வலியால் துடித்த பெண்மணி..! வயிற்றுக்குள் இருந்த 15 கிலோ கட்டி வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை

Update: 2023-08-10 04:05 GMT

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில், பெண்ணின் உடலில் இருந்த 15 கிலோ கட்டியை மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். அஷ்டாவைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், வயிற்று வலி எனக்கூறி இண்டெக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெரிய கட்டி இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த மருத்துவர்கள், சுமார் இரண்டு மணிநேரம் ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு கட்டியை அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்