கொல்கத்தா டாக்டர் கொலைக்கு பின் ஒளிந்திருக்கும் ரகசியம்.. உள்ளே இறங்கி ஆடும் ED..

Update: 2024-09-06 08:26 GMT

கொல்கத்தா மருத்துவமனை நிதி முறைகேடு விவகாரத்தில், முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய நிதி முறைகேடு புகார் குறித்து விசாரிக்கக்கோரி அம்மருத்துவமனை முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜஸ்ரீ பரத்வாஜ், சிபிஐ புலன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணையை தொடங்கியுள்ளது.

சந்தீப் கோஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 28-ம் தேதி சோதனை நடத்தியதைத் தொடர்ந்து,

சந்தீப் கோஷ், விற்பனையாளர்கள் பிப்லவ் சிங்கா, சுமன் ஹஸாரா, கோஷின் கூடுதல் பாதுகாவலர் அஃப்ஸர் அலி ஆகியோரை கைது செய்தனர்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக,

கொல்கத்தாவில் உள்ள சந்தீப் கோஷுக்கு சொந்தமான ஆறு இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்