திடீரென சுனாமி போல் மாறிய அருவி.. ஒரே குடும்பத்தில் 5 பேர் கோர பலி.. உருக்குலைக்கும் கடைசி நொடிகள்

Update: 2024-07-01 05:15 GMT

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் லோனாவாலா பகுதியில் உள்ள புஷி அணையில் அருகே உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவறி விழுந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

பிற்பகல் 3 மணி அளவில் நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், சிக்கி உயிரிழந்தவர்களில் 40 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமியின் சடலங்களை மீட்பு குழு கண்டெடுத்தனர். மேலும் 6 வயது சிறுமிகள் இருவர் மற்றும் 4 வயது ஆண் குழந்தை மாயமான நிலையில், மேலும் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரவானதால், மீட்பு பணியை தற்காலிகமாக நிறுத்திய மீட்பு குழுவினர், மீண்டும் காலை மீட்பு பணி தொடரும் என்றும் காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்