ஆளுநர் மளிகை அருகே... பற்றியெரிந்த போலீஸ் வேன்... வெளியான பரபரப்பு காட்சி
உத்தரபிரதேசத்தில் சிறைக் கைதிகளை அழைத்துச் சென்ற காவல் துறை வாகனம் நடுவழியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லக்னோ மாவட்ட சிறையில் இருந்து பெண் கைதிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது, ஆளுநர் மாளிகை அருகே திடீரென்று அவர்கள் சென்ற வாகனம் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து வாகனத்தில் இருந்த பெண் கைதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக, சிறைக் கைதிகளும், காவல் துறை அதிகாரிகளும் உயிர் தப்பினர்.