மீண்டும் நிலச்சரிவு... உறைந்து நின்ற மக்கள்... ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் வீடியோ
உத்தராகண்ட் மாநிலம் சோனாபாக் என்ற இடத்தில்
இன்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தப்
பகுதி குடியிருப்பு வாசிகள் நிலச்சரிவை அதிர்ச்சியுடன்
பார்க்கும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளன.
பல்வேறு இடங்களில் நிலச்சரிவு காரணமாக சாலைகள்
சேதம் அடைந்துள்ளதால் ஏராளமான மக்கள் சிக்கித்
தவிக்கின்றனர். 12 தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும்
60 பேரிட மீட்பு குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் மழை
காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர்
படுகாயமடைந்துள்ளனர்.