நாட்டையே கொதிக்க வைத்த விவகாரம்... மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

Update: 2024-08-20 15:31 GMT

மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவர்கள்

மற்றும் ஊழியர்கள் கட்டாயமாக அடையாள அட்டைகளை

அணிந்திருக்க வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உட்பட

அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் பாதுகாப்பு

அச்சுறுத்தல்களை உணர்ந்து, பாதுகாப்புப் பயிற்சி

பெற்றிருக்க வேண்டும்.

ஊழியர்கள் அவசரகால சூழ்நிலைகளை கையாள்வதற்கு தேர்ச்சி பெற வேண்டும்.

வளாகத்தில் இருட்டான பகுதிகளில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும்.

அடிப்படை வசதிகளுடன் கூடிய நன்கு பாதுகாக்கப்பட்ட பணி அறைகள் போதுமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

மருத்துவமனை வளாகத்தில் முறையான கண்காணிப்பு கேமராக்கள் போதுமான எண்ணிக்கையில் பொறுத்திருக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்