திருப்பதியில் இருந்து திருமலைக்கு கட்சியினர் புடை சூழ பாதயாத்திரை சென்றுள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், புதன்கிழமை காலை ஏழுமலையானை வழிபட உள்ளார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் திருப்பதி மலைக்கு பிரசாதங்கள் தயார் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட நெய், கலப்பட நெய் என்று ஆய்வக முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால், ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க சாஸ்திர ரீதியாக பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் தன்னுடைய பங்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் பரிகார தீட்சை மேற்கொண்டுள்ளார். அவரது தீட்சை நிறைவடைய உள்ள நிலையில் திருப்பதிக்கு வந்த பவன் கல்யாண், அங்கிருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக தொண்டர்கள், ரசிகர்கள் ஆகியோர் புடைசூழ நடந்து சென்றார். திருப்பதி மலையில் இரவு தங்கும் அவர், காலை ஏழுமலையான வழிபட்டு தன்னுடைய தீட்சையை நிறைவு செய்கிறார்.