சர்ச்சைக்கு பின் திருப்பதி லட்டு விற்பனைக்கு என்னாச்சு? 10 நாள் டேட்டாவை பார்த்து மிரண்ட தேவஸ்தானம்

Update: 2024-09-25 10:58 GMT

நாட்டையே உலுக்கிய சர்ச்சைக்கு பின் திருப்பதி

லட்டு விற்பனைக்கு என்னாச்சு? 10 நாள் டேட்டாவை பார்த்து மிரண்ட தேவஸ்தானம்

திருப்பதி லட்டு பிரசாத சர்ச்சை ஒருபுறம் இருக்க, கடந்த 10 நாட்களில் மட்டும் 36 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள், லட்டு பிரசாதத்தை போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

இதன்படி, கடந்த 14ம் தேதி, 3 லட்சத்து 70 ஆயிரத்து 811 லட்டுகளும், 15ம் தேதி, 4 லட்சத்து 7 ஆயிரத்து 545 லட்டுகளும், 16ம் தேதி, 3 லட்சத்து 88 ஆயிரத்து 485 லட்டுகளும் விற்பனையாகி உள்ளன.

17ம் தேதி, 3 லட்சத்து 42 ஆயிரத்து 68 லட்டுகளும், 18ம் தேதி, 4 லட்சத்து 68 லட்டுகளும், 19ம் தேதி, 3 லட்சத்து 59 ஆயிரத்து 660 லட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

20ம் தேதி, 3 லட்சத்து 13 ஆயிரத்து 954 லட்டுக்களும், 21-ம் தேதி, 3 லட்சத்து 67 ஆயிரத்து 607 லட்டுகளும், 22-ம் தேதி, 3 லட்சத்து 46 ஆயிரத்து 640 லட்டுகளும், 23ம் தேதி, 3 லட்சத்து 8 ஆயிரத்து 774 லட்டுகளும் விற்பனையாகி உள்ளன.

இதன் மூலம், கடந்த 10 நாட்களில் மட்டும், 36 லட்சத்து 4 ஆயிரத்து 617 லட்டுகளை திருப்பதிக்கு வந்த பக்தர்கள் வாங்கிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்