திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைப்பு - வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.
கிரகணம் துவங்குவதற்கு ஆறு மணி நேரம் முன்னதாக கோவில் நடைகளை அடைக்க வேண்டும் என்ற சாஸ்திர ரீதியான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் உள்ளிட்ட தேவஸ்தானத்தின் அனைத்து கோவில் நடைகளும் சனிக்கிழமை இரவு மணி 7.05 க்கு அடைக்கப்பட்டன.