கர்நாடக மாநிலம் உடுப்பியில், தீபாவளி பூஜையின்போது துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் தீ விபத்து ஏற்பட்டு, 7 படகுகள், 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம் அடைந்தன.
உடுப்பி மாவட்டத்தில் உள்ள கங்கொலி துறைமுகத்தில் நூற்றுக் கணக்கான மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு தீபாவளி பூஜை நடத்தினர். பூஜையின்போது திடீரென தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகில் தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென்று அருகில் இருந்த படகுகளுக்கும் தீ பரவத் தொடங்கியது. அப்போது பலத்த காற்று வீசியதால் மற்ற படகுகளுக்கு தீ பரவி எரியத் தொடங்கியது. பொதுமக்கள் ஒருபுறம் தீயை அணைக்க போராடிக் கொண்டிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.