தமிழகத்தை சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு விருது... வெளியான முக்கிய தகவல்
தமிழகத்தை சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு விருது... வெளியான முக்கிய தகவல்
2024 ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் தக்ஷதா பதக் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடைய அறிவியல், உளவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய ஆயுதக்காவல் படையை சேர்ந்த மொத்தம் 463 காவலர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஏ எஸ் பி வந்திதா பாண்டே, காவல் ஆய்வாளர்கள் அம்பிகா மற்றும் உதயகுமார், எஸ்பி மீனா, ஏ எஸ் பி கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேருக்கும் தக்ஷதா பதக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.