டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிச்சமின்மையால் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளது. இதேபோல் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வரவேண்டிய மற்றும் புறப்படும் ரயில்கள் தாமதமாகியுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.