திடீரென ஆவேசமான சுரேஷ் கோபி... ரிப்போர்ட்டரை தள்ளிவிட்ட பரபரப்பு வீடியோ
திருச்சூரில் செய்தியாளர் ஒருவரை, மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி தள்ளிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாலியல் புகார் விவகாரம், கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னணி நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் திருச்சூரில் செய்தியாளர்கள் கருத்து கேட்க முற்பட்டனர். அப்போது ஆவேசமடைந்த சுரேஷ்கோபி, செய்தியாளர்களில் ஒருவரை திடீரென தள்ளிவிட்டார். பின்னர் தனது பணியை மேற்கொள்ள வழி விடுமாறு ஆவேசமாக கூறி அங்கிருந்து காரில் வேகமாக புறப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.