``பெண் வழக்குரைஞரிடம் உள்ளாடை குறித்து பேச்சு; முஸ்லிம் வாழும் பகுதி..'' அதிர்வை கிளப்பிய நீதிபதி

Update: 2024-09-20 17:51 GMT

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வழக்கு விசாரணையின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பெங்களூருவின் ஒரு பகுதியை பாகிஸ்தான் என்றும், பெண் வழக்குரைஞரிடம் உள்ளாடை உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தாகவும் கூறி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நிர்வாக ஆலோசனை பெற்று, அது குறித்த அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை பதிவாளரிடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்