டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகளில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத் துறை கடந்தாண்டு பிப்ரவரியில் கைது செய்தது. இதைத் தொடர்ந்து சிபிஐயும் அவரை கைது செய்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த உச்சநீதிமன்றம், மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.