தொடர் மழையால் திடீர் நிலச்சரிவு - மண்ணுக்குள் புதைந்த வீடு
இலங்கையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் மண்ணுக்குள் நால்வர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தொடர் மழை காரணமாக கேகாலை மாவட்டம் வரக்காபொல - தும்பிலியத்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு மண்ணிற்குள் புதைந்தது.
இதில் நால்வர் சிக்கிக் கொண்டனர். ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான மேலும் மூவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் கனமழை, வெள்ளம், மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பகுதிகளில் கணிசமாக மழை பெய்துள்ள நிலையில், 48 மணி நேரத்திற்குள் ஆற்றுப் பள்ளத்தாக்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் 31 பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக 11 மாவட்டங்களில் இதுவரை 21 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடங்களில் ஆபத்தான நிலையில் இருந்த 264 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.