நடுக்கடலில் வெடித்து சிதறும் கப்பல்கள்.. ஹவுதிக்களால் செங்கடலில் பெரும் பதற்றம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா கொடியுடன் கூடிய சியோஸ் லயன் என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் செங்கடலில் ஏமனின் ஹவுதி இயக்கத்தால் தாக்கப்பட்டது... இதனால் ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருவதுடன் கடலில் எண்ணெய்க் கசிவை ஆராய்ந்து வருவதாக செங்கடல் மற்றும் ஏமன் வளைகுடா கூட்டு கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது... தெற்கு காசா பகுதி நகரமான கான் யூனிஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்டவைகள் மூலம் சியோஸ் லயன் மற்றும் மத்திய அமெரிக்க நாடான பனாமா கொடியுடன் கூடிய பென்ட்லி கப்பலைக் குறி வைத்ததாக ஹவுதி இயக்கம் தெரிவித்துள்ளது... போர் துவங்கியது முதல் இஸ்ரேல் நட்பு நாடுகளின் சரக்குக் கப்பல்களைக் குறி வைத்து ஹவுதி தொடர் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.