ரசிகரை கொன்ற வழக்கு.. வெளியே வந்தார் தர்ஷன்... ஆபரேஷன் என நாடகமா..? அடுத்த பரபரப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல கன்னட நடிகர் தர்ஷன் வீடு திரும்பினார். ரேணுகா சாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தர்ஷன் முதுகு வலி காரணமாக சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவ அடிப்படையில் ஜாமீன் பெற்று கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதுகு வலிக்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிசியோதெரபி சிகிச்சை மட்டும் எடுத்து வந்தார். தற்போது அவருக்கு சாதாரண ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 4 நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து தற்போது தர்ஷன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று பெங்களூரு போலீசார் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.