அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..ஆளில்லா வீட்டில் அசம்பாவிதம்..கேரள இளைஞர்களின் கொடூர செயல்

Update: 2023-08-03 12:42 GMT

கேரள மாநிலம் கொல்லத்தில் அமெரிக்க பெண்ணுக்கு மது கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் கொல்லத்தில் உள்ள அமிர்தானந்தமயி மடத்தை பார்வையிட அமெரிக்கவை சேர்ந்த பெண் வந்துள்ளார். அவர் ஆழிக்கல் கடற்கரைக்கு சென்ற போது, கருநாகப்பாள்ளியை சேர்ந்த ஜெயின் மற்றும் நிகில் பேச்சு கொடுத்துள்ளனர். சிகரெட் கொடுத்து பேசிய அவர்கள், பின் மது அருந்தலாம் என கூறி ஆளில்லாத வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு, 3 பேரும் மது அருந்திய நிலையில், அதிக போதையில் இருந்த அமெரிக்க பெண்ணை, ஜெயின் மற்றும் நிகில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். போதை தெளிந்த பின்னர் ஆசிரம‌ம் சென்ற பெண், தனக்கு நடந்த கொடுமையை போலீசில் புகாராக அளித்தார். இதன் அடிப்படையில் ஜெயின் மற்றும் நிகிலை கைது செய்தனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்