SBI பேங்க்-யை வைத்து நடந்த மெகா மோசடி... AC ஓபன் செய்தவர்கள் தலையில் பேரிடி

Update: 2024-10-04 09:15 GMT

சத்தீஸ்கரில் பொதுத்துறை வங்கியின் கிளையை போலியாகத் துவங்கி லட்சக்கணக்கில் ஒரு கும்பல் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள சோப்ரா கிராமத்தில் பொதுத்துறை வங்கியின் பெயரில் போலிக் கிளை உருவாக்கப்பட்டுள்ளது... அசல் கிளையைப் போன்றே கவுன்ட்டர்கள், உள்ளிட்டவைகளுடன் இந்த போலியான கிளை துவங்கப்பட்டு 6 ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது மோசடி என்று தெரியாத கிராம மக்களும் வங்கியில் புதிய கணக்குகள் தொடங்கி, பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் அருகில் தப்ராவில் செயல்பட்டு வந்த பொதுத்துறை கிளையின் மேலாளர் புதிய கிளை பற்றி சந்தேகம் அடைந்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து கடந்த 27ம் தேதி போலி வங்கி கிளையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கடந்த 10 நாள்களாக போலி வங்கிக் கிளை செயல்பட்டு வருவதும், போலி ஆவணங்கள் மூலம் பலர் வேலையில் நியமிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இந்த மோசடியில் 4 பேருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 2 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு இந்த போலி கிளையில் ஆட்களை நியமித்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்