சமோசாவை வாயில் வைத்ததும் உள்ளே விழுந்த கால்.. பார்க்கும் நமக்கே கண்ணை கட்டும் வீடியோ
காசியாபாத்தை சேர்ந்த அமான் சர்மா, அங்கிருக்கும் பேக்கரி ஒன்றில் வீட்டிற்கு சமோசா வாங்கிச் சென்றுள்ளார். வீட்டில் சமோசாவை சாப்பிட தொடங்கிய போது, அதற்குள் தவளையின் கால் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தவர் பேக்கரிக்கு சென்று சமோசாவை திருப்பிக் கொடுத்துள்ளார். பேக்கரி பணியாளர்களுடன் சர்மாவும், அங்கிருந்தவர்களும் வாக்குவாதம் செய்ய, போலீசுக்கும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள் பேக்கரி பொருட்களின் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆய்வு முடிவு தெரியவந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் விரும்பி சாப்பிடும் சமோசாவில் தவளையின் கால் என்ற வீடியோ அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.