ரூ.66 லட்சம் ஆன்லைன் மோசடி - திருடன் சொன்ன பதிலை கேட்டு ஷாக் ஆன போலீஸ்

Update: 2023-08-16 05:34 GMT

ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைக் கூறி, நூதன மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்...

டெலிகிராம் மூலமும், யூடியூப் சப்ஸ்கிரைப் டாஸ்க் (Youtube subscribe task) மூலமும் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, பல்வேறு வங்கி கணக்குகளில் 66 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, கடந்த மார்ச்மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் பதிவானது. இது தொடர்பாக விசாரித்து வந்த குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், ரிதம் சாவ்லா என்பவரை உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவரது வங்கி கணக்குகளில் இருந்த 19 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் முடக்கினர். இதனிடையே அவரிடம் நடத்திய விசாரணையில், கிரிப்டோ கரன்சியில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தது அம்பலமாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்