4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்! தொடர் மழையால் கதறும் வட மாநிலங்கள் - வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை

Update: 2023-07-27 03:27 GMT

இந்தியாவில் வடக்கு முதல் தெற்கு வரை பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், நான்கு மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது

கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரா பிரதேசத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட், புனே, சதாரா மற்றும் ரத்னகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை மாநகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த நான்கு முதல் ஆறு நாட்களுக்கு டெல்லியில் பலத்த மழை இருக்கும் என்றும், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா மற்றும் அசாமில் கன மழை பெய்ய கூடுமென இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்