புனேவை உலுக்கிய கார் விபத்து.. மகனை காப்பாற்ற தாய் செய்த செயல் - கடைசியில் வெளிவந்த திடுக் பின்னணி..

Update: 2024-05-30 12:05 GMT

மகராஷ்டிரா மாநிலம் புனேவில், மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவன்... பைக்கில் சென்ற இருவரை ஏற்றிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சிறுவன் மது அருந்திவிட்டு காரை இயக்கிய நிலையில், சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் அவர் மது அருந்தவில்லை என மருத்துவர் தெரிவித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதில், சிறுவனின் ரத்த மாதிரி குப்பைத்தொட்டியில் வீசப்பட்டு, வேறொருவரின் ரத்த மாதிரி வைக்கப்பட்டிருந்தது அம்பலமாகியது. இதுதொடர்பாக மருத்துவமனை தலைமை மருத்துவர் இருவரை போலீசார் கைது செய்திருந்தனர். சினிமாவை மிஞ்சிய இந்த பகீர் சம்பவத்தில், தற்போது மருத்துவர்களால் மாற்றி வைக்கப்பட்ட ரத்த மாதிரி சிறுவனின் தாயுடையது என்பது தெரியவந்துள்ளது. பரிசோதனையின் போது சிறுவனுடனே இருந்த அவரது தாய், தனது ரத்த மாதிரியை வழங்கி அதனை மாற்றி வைத்தது தெரியவர, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்