ஓணம் பண்டிகை.. வேற லெவல் vibe...! கேரள பாரம்பரிய ஆடையில் அசத்தும் பெண்கள் | Onam
கோவை சித்தாப்புதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், வீடுகள் தோறும் வண்ணமயமாக கோலமிட்டு, விஷூ கனி படையலிட்டு உற்சாகமாக ஓணம் கொண்டாடினர்.
CBE ONAM CELEBRATION 1 2
கன்னியாகுமரி கல்குளம் ராமசுவாமி கோயில் வளாகத்தில், வண்ண வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிடப்பட்டிருந்தது. ஏராளமானோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
NGL ATTHAPPOOO
ஈரோடு பாலாஜி கார்டன் பகுதியில் வசிக்கும் கேரள மக்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்காக மனமுருக பிரார்த்தனை செய்தனர். பாரம்பரிய நடனமான கதகளியின் படத்தைக் கோலமாக வரைந்தும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.
ERD OONAM CELEBRATION
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் வயநாடு நிலச்சரிவு சோகம் காரணமாக விளையாட்டுப் போட்டி மற்றும் பல்வேறு விழாக்களை தவிர்த்து வீடுகளுக்கு முன்பாக அத்த பூக்கோலம் மட்டும் இட்டு மக்கள் ஓணம் கொண்டாடினர்.