"நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்யனும்" ..."இல்லனா 11 வெடிகுண்டுகள் வெடிக்கும்"

Update: 2023-12-27 07:33 GMT

ரிசர்வ் வங்கிக்கு வந்த மின்னஞ்சலில், தனியார் வங்கிகளுடன் இணைந்து ரிசர்வ் வங்கி, இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழலை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடியில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சில அமைச்சர்கள் இருப்பதாகவும், அதற்குப் போதுமான ஆதாரம் இருப்பதாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், ஊழல் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், மும்பையில் 11 இடங்களில் 11 குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஒவ்வொன்றாக வெடிக்கும் என்றும் மிரட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மும்பை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட நிலையில், சந்தேகப்படும்படியான இடங்களில் எதுவும் கிடைக்காததால், மின்னஞ்சல் அனுப்பி மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்