ராணுவத்துக்கே உதவிய கிராமம் கண்ணீர் கடலில்.. அடுத்த வேளைக்கு கூட.. குமுறும் மக்கள்

Update: 2024-09-22 15:54 GMT

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் போது தண்ணீர் ஊற்றி தீயணைத்து உதவி கரம் நீட்டிய கிராம மக்கள், கடந்த 10 நாட்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தின் போது நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்படி உதவிக்கரம் நீட்டியதற்காக நஞ்சப்பசத்திரம் கிராமத்திற்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அப்போது அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. எனினும், கடந்த 10 நாட்களாக குடிநீர் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சமையல் செய்வதற்குக்கூட தண்ணீர் இல்லை என்றும், சொட்டு சொட்டாக வரும் தண்ணீர் கூட சேறும் சகதியுமாக வருவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்