புதிய இந்திய தண்டனைச் சட்டம்..! ப.சிதம்பரம் X தளத்தில் பரபரப்பு ட்விட் | IPC | CRPC

Update: 2023-12-26 03:11 GMT

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய இந்திய தண்டனைச் சட்டம் மிகவும் அபாயகரமானது என்றும், ஏழை, உழைக்கும் வர்க்கம் ஒடுக்கும் கருவியாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார். புதிய குற்ற விசாரணை முறை சட்டத்தில், அரசியலமைப்பின் 19 மற்றும் 21-வது பிரிவுகளை மீறும் வகையில் பல விதிகள் உள்ளதால், அதன் பாதிப்பை ஏழை மக்கள் சுமக்க நேரிடும் என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். 'சுதந்திரம்' மற்றும் 'தனிப்பட்ட சுதந்திரம்' ஆகியவற்றைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் பல விதிகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். கைது மற்றும் போலீஸ் காவலில் இச்சட்டம் காவல்துறையின் அத்துமீறலுக்கும், துன்ப சம்பவங்களுக்கும் வழிவகுத்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார். 2024-ம் ஆண்டில் அமையும் புதிய அரசு, முதல் பணியாக மறு பரிசீலனை செய்து, கடுமையான விதிகளை அகற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்