பூதாகரமாக வெடித்த NEET விவகாரம் - வடமாநிலங்களில் பற்றிய போராட்ட தீ - கொந்தளிப்பில் மாணவர்கள்

Update: 2024-06-15 13:57 GMT

மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் மோசடி நடந்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணையில் 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. இதற்கிடையே தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிதிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அப்போது பேசிய மாணவர்கள், 30 லட்சம் ரூபாய்க்கு நீட் வினாத்தாள் விற்கப்பட்டு இருப்பதாக என குற்றம் சாட்டினார். வினாத்தாள் கசிவு என்ற தகவலை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாக மறுத்தார். பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்திருப்பதாக அம்மாநில போலீசார் கைது நடவடிக்கை மற்றும் விசாரணையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள், தேர்வை ரத்து செய்துவிட்டு எல்லோருக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்