குவைத் கோர விபத்து - குடும்பத்தில் ஒருவருக்கு வேலை.. ரூ.8 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, NBTC நிறுவனம் அறிவித்துள்ளது.
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு NBTC நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இன்சூரன்ஸ் இழப்பீடு பெற்றுத்தரப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு தங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் NBTC நிறுவனம் தெரிவித்துள்ளது.