அடம்பிடித்து காரை வாங்கி ஓட்டிய பணக்கார வீட்டு பிள்ளை... அடுத்த சில நிமிடங்களிலேயே நடந்த பயங்கரம்

Update: 2024-07-08 05:03 GMT

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவரின் மகன் சொகுசு கார் மும்பை வோர்லியில் அதிவேகமாக ஸ்கூட்டி மீது மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.v

குற்றம் சாட்டப்பட்ட 24 வயது மிஹிர் ஷா தப்பி ஓடிய நிலையில் அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது... இவர் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள சிவசேனாவின் துணைத் தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் ராஜேஷ் ஷாவும் ஓட்டுனருமான ராஜேந்திர சிங் பிஜாவத்தும் கைது செய்யப்பட்டனர். புதிய குற்றவியல் சட்டமான பாரதீய நியாய சன்ஹிதாவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது... மிஹிர் ஷா இரவு ஜூஹூவில் உள்ள ஒரு பாரில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில், டிரைவரிடம் தன்னை நீண்ட தூரம் அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்... கார் வொர்லி பகுதியை நெருங்கிய போது, காரை தான்தான் ஓட்டுவேன் என அடம்பிடித்து வாங்கிய மிஹிர் ஷா ஓட்டிய சிறிது தூரத்திலேயே விபத்தை ஏற்படுத்தியுள்ளார்... விபத்தில் கொல்லப்பட்ட காவேரி நக்வா தன் கணவருடன் மீன் வியாபாரம் செய்து வந்த நிலையில், துறைமுகத்திற்கு மீன் எடுக்க சென்று விட்டு அத்தம்பதி திரும்பிக் கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது... மிஹிர் தனது தந்தையை அழைத்து விபத்து குறித்து கூறி விட்டு தப்பி ஓடியுள்ளார்... போலீசாரின் விசாரணையில் ஆதாரங்களை அழிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தப்பி ஓடிய மிஹிர் ஷாவை 4 தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்