உடலுறவு மூலமும் பரவும் குலைநடுங்க விடும் வைரஸ் இந்தியாவிற்குள்ளும் ஊடுருவியதா?
இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் இல்லை என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.உலக நாடுகளிடையே குரங்கம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்தது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே தென்பட்ட இந்நோய், தற்போது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டுமென, விமான நிலைய அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், உடலில் சிறு கொப்பளம், தலைவலி, தசைப்பிடிப்பு, உடல் சோர்வு, தொண்டைப் புண், இருமல் உள்ளிட்ட அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை குரங்கம்மை பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும்,குரங்கம்மை பாதிப்புகளின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.