குரங்கு அம்மை நோய் பரவி வருவதால், சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், பிரதமரின் முதன்மைச் செயலாளர் மிஸ்ரா தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அப்போது, தற்போதைய நிலவரப்படி, நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. கண்காணிப்பை மேம்படுத்தி, பாதிப்புகளை விரைவாகக் கண்டறிய பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமரின் முதன்மை செயலாளர் மிஸ்ரா உத்தரவிட்டார். மேலும், பரிசோதனை ஆய்வகம் ஆரம்பகால நோயறிதலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நோயின் அறிகுறிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புக்கு சரியான நேரத்தில் அறிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சுகாதார வழங்குநர்களிடம் வலியுறுத்தினார்.