ஒரே கமெண்ட்.. பாஜகவுக்கு ஒரு அடி.. நிதிஷ்-க்கு ஒரு அடி - `நக்கல்யா..' லாலு மகனின் சம்பவம்

Update: 2024-02-13 06:24 GMT

பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை ஒரு தந்தை என்ற முறையில் தசரதனாக நான் பார்க்கிறேன் என்ற தேஜஸ்வி யாதவ், தசரதன் தனது மகன் ராமனை காட்டுக்கு அனுப்பியது போல், அவர் பீகார் மக்களை காட்டிற்கு அனுப்பிவிட்டதாக விமர்ச்சித்தார்.

பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது பேசிய அவர், ஒன்பது முறை கட்சி மாறி கட்சி மாறி முதல்வராக பொறுப்பேற்றதற்கு நிதீஷ் குமார் நன்றி என்று கிண்டல் செய்தார். பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தால் அது நிறைவேற்றப்படும் என கூறும் பாஜகவினரிடம் கேட்கிறேன், இன்னொருமுறை நிதீஷ் குமார் கட்சி மாற மாட்டார் என மோடியால் உறுதி அளிக்க முடியுமா என்று தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்