Layoffs...2023 முடிவதற்குள் இந்தியர்கள் தலையில் விழுந்த பேரிடி...முதலில் அமெரிக்கா 2 வது இந்தியா

Update: 2023-10-29 15:02 GMT
  • டெக் துறையில், சிறிய முதலீடுகளில், துடிப்பு மிகுந்த இளம்
  • தொழில் முனைவோர்களினால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை
  • ஊக்குவிக்க, மத்திய அரசு ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை
  • முன்னெடுத்துள்ளது.
  • தமிழக அரசு ஸ்டார்ட் அப் தமிழ் நாடு திட்டத்தை 50 கோடி
  • ரூபாய் செலவில் செயல்படுத்தி வருகிறது.
  • ஆனால் உலகப் பொருளாதார பாதிப்புகள் காரணமாக
  • ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன.
  • 2022ல், மொத்தம் 14,224 ஊழியர்களை இந்திய ஸ்டார்ட் அப்
  • நிறுவனங்கள் பணி நீக்கம் செய்தன.
  • 2023ல் அக்டோபர் 20 வரை 14,418 பேர் பணி நீக்கம்
  • செய்யப்பட்டுள்ளதாக layoffs.fyi என்ற ஆய்வு நிறுவனம்
  • வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
  • பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 60 சதவீதத்தினர்,
  • இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூருவில்
  • பணி புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பணி இழப்புகளில் குர்கிராமின் பங்கு 16 சதவீதமாகவும்,
  • மும்பையின் பங்கு 11 சதவீதமாகவும், சென்னை மற்றும்
  • புது டெல்லியின் பங்கு 3 முதல் 7 சதவீதமாகவும் உள்ளது.
  • கல்வித் துறை சார்ந்த ஸ்டார்ட் அப்களில் அதிகபட்சமாக
  • 4,630 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • உணவுத் துறையில் 2765 பேரும், சில்லரை விற்பனையில்
  • 1652 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • உலக அளவில், ஸ்டார்ட் அப் துறையில் வேலை இழப்புகளில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
  • அமெரிக்காவில் 2023ல் இதுவரை மொத்தம் 1.67 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஜெர்மனியில் 12,853 பேரும், ஸ்வீடனில் 9,765 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவில், 2023-ன் முதல் ஒன்பது மாதங்களில், ஸ்டார்ட் அப் துறையில் 51,500 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
  • 2022- ன் முதல் ஒன்பது மாதங்களில், இந்தத் துறை1.88 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது ஒப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்