கொல்கத்தா டாக்டர் வழக்கில் ஆஜராகும் பெண் வக்கீல்களுக்கு ஆசிட் வீச்சு, பலாத்கார த்ரெட்
கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம், கொலை வழக்கு விசாரணையை நேரலை செய்வதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
பெண் மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. வழக்கு விசாரணையின் போது, மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கு விசாரணையில் ஆஜராகும் தனது அலுவலக பெண் வழக்கறிஞர்களுக்கு, அமில வீச்சு, வல்லுறவு போன்ற மிரட்டல் வருவதால் நேரலையை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், எந்த ஒரு தரப்புக்காகவும் ஆஜராகும் வழக்கறிஞர்களை மிரட்ட முடியாது, இந்த விவகாரத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.