ஸ்டார் நடிகைகளை படுக்கையில் கொஞ்சிய 15 பிக் ஸ்டார்ஸ் - நாட்டுக்கே தலைப்பு செய்தியான 233 பக்கம்

Update: 2024-08-20 08:06 GMT

ஸ்டார் நடிகைகளை படுக்கையில் அழைத்து

கொஞ்சிய சினிமாவின் 15 பிக் ஸ்டார்ஸ்

நாட்டுக்கே தலைப்பு செய்தியான 233 பக்க கேவலம்

கேரள திரைத்துறையில் நடப்பது என்ன? என்பதை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான 233 பக்க அறிக்கை... அறிக்கையின் ஒவ்வொரு பக்கமும் அதிர்ச்சி தந்திருக்கும் சூழலில் அது என்ன? என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

கேரளா திரையுலகில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் கடந்து சென்று இருக்க முடியாது....

முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு காரிலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்...இதில் முன்னணி நடிகர் தீலிப் உட்பட 9 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகள் முதல் பெண் கலைஞர்கள் வரை எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டது.

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்திய ஆய்வு கமிட்டி கடந்த 2019ம் ஆண்டே அரசிடம் அறிக்கையை சமர்பித்த நிலையில் அதனை வெளியிடாமலேயே மவுனம் காத்தது வந்த கேரள அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. முக்கிய நடிகர்களைக் காப்பாற்றுவதற்காகவே அறிக்கை வெளியிடப்படவில்லை என திரையுலகில் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை நான்கு வருடங்களுக்குப் பின் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் சினிமா இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பவர்புல்லான 15 ஆண்களின் கையில் தான் மலையாள திரையுலகம் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த 15 பேர் தான் ஒரு சினிமாவில் எந்த நடிகை நடிக்க வேண்டும், எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் தீர்மானிப்பதாக கூறப்பட்டுள்ளது.

நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் கலாச்சாரம் மலையாள திரையுலகில் வலுவாக வேறுரூன்றி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள்..

நடிகைகளில் பலர் தனியாக ஹோட்டல்களில் தங்குவதற்கே அஞ்சும் நிலை உள்ளதாகவும், அதனாலே பலர் தங்கள் குடும்பத்தினருடன் தங்குவதாகவும் கமிட்டி முன் ஆஜரானவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

பெரும்பாலும் புது முகங்களாக அறிமுகமாகும் நடிகைகளும் பாலியல் துன்புறுத்தலில் தொடங்கி ...பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்

சில சந்தர்ப்பங்களில் சம்மந்தப்பட்ட நடிகைகளின் அம்மாக்களே பாலியல் தேவைக்கெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்... அது தப்பில்லை என்று கூறியதாக ஒரு நடிகை கூறியது அதிர்ச்சியளிப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

இது ஒருபக்கம் என்றால் ஜூனியர் ஆர்ட்டிஸ்கள் படும் பாடு மிகவும் வேதனையளிப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது... ஷூட்டிங்கின் போது இயற்கை உபாதையை கழிக்க பாத்ரூம் போக வேண்டும் என கூறினால் கூட அவர்களை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொள்ள வேண்டும் என கூறுவது வழக்கமான ஒன்று என்றும், அதனாலேயே பெரும்பாலானோர் தண்ணீர் குடிக்கக் கூட தயங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது...

இப்படியாக 233 பக்க அறிக்கையின் ஒவ்வொரு பக்கமும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. திரையில் வரும் நாயகிகளை பார்த்து விசிலடித்து அவர்கள் குறித்து கமெண்டுகளை பகிர்ந்து வரும் நாம் அவர்களின் பின்னணியில் இருக்கும் துயரங்கள் இத்தனையா? என உணர்வதே இல்லை...

கேரள சினிமாத்துறையில் இப்படி ஒரு அவலமா? என அதிர்ச்சி கிளப்பி இருக்கும் இந்த அறிக்கை, நிச்சயம் பல நாட்கள் கேரளாவில் பேசு பொருளாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...

Tags:    

மேலும் செய்திகள்