கேரள அரசு சொன்ன பாயிண்ட்... நடிகர் வழக்கில் திருப்பம்... சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

Update: 2024-10-22 14:21 GMT

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஒரு ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரம் போலீசில், நடிகை ஒருவர் புகார் கொடுத்தார். இந்த வழக்கு சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நடிகர் சித்திக் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 30ஆம் தேதி, அவருக்கு முன் ஜாமீன் வழங்கி, கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது சித்திக் ஆதாரங்களை அழித்து வருவதாக கேரள அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

கேரளா அரசின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க சித்திக் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம், அதுவரை அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனையும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்தது.

Tags:    

மேலும் செய்திகள்