பேரழிவை முன்பே கணித்த நபர்.. புதைந்து போன உயிர் நண்பர்கள் - மனைவி, குழந்தைகளை காப்பாற்றிய அதிர்ஷ்டம்
கனமழை காரணமாக தனது சகோதரி வீட்டிற்கு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றதால் நிலச்சரிவிலிருந்து தப்பியதாக, மேப்பாடி பகுதியைச் சேர்ந்த கமர் என்பவர் தெரிவித்தார். 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான வீடு, நிலம் மற்றும் பொருட்களை இழந்தாலும், தனது நண்பர்களின் இழப்பை தன்னால் தாங்க முடியவில்லை என கண்ணீர்மல்க தெரிவித்தார்.