மல்லுவுட்டில் பற்றி எரியும் பாலியல் விவகாரம்... கோலிவுட்டில் கொளுத்தி போட்ட அரசியல் தலை

Update: 2024-08-30 09:10 GMT

கேரளாவில் ஹேமா குழு அமைக்கப்பட்டது போல் தமிழ்நாட்டில் ஏன் அமைக்கவில்லை என்ற பெண் கலைஞர்களின் கேள்வி நியாயமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். மும்பை தொடங்கி திரையுலகில் பெண்கள் சுரண்டப்படுவது பகிரங்கமான ரகசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில்துறை உள்ள அதிகார அமைப்புகளால் பெண்களின் குரல்கள் நசுக்கப்படுவதாகவும், கேரளாவில் இடதுசாரி ஜனநாயக அரசு இல்லாமல் இருந்திருந்தால், நடிகைகள் மீதான துன்புறுத்தல் தொடர்ந்திருக்கும் என்றும் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்