கெஜ்ரிவால் மீது தாக்குதல்..?
டெல்லி விகாஸ்புரி பகுதியில் பாத யாத்திரை சென்ற கெஜ்ரிவாலை, பாஜகவோடு தொடர்புடைய நபர்கள் தாக்க முயற்சி செய்ததாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் மீதான மக்கள் அன்பை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை, அதனால் பாஜகவோடு தொடர்புடையவர்கள் கெஜ்ரிவாலை தாக்க முயற்சி செய்துள்ளார்கள் என டெல்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார். கெஜ்ரிவாலை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்பதை பாஜக இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து அவரை கொல்ல முயற்சிப்பதாக அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.