கர்நாடகாவை உலுக்கிய கொலை வழக்கு.. கைதான மருத்துவமனையில் நடிகை அனுமதி

Update: 2024-06-19 08:09 GMT

ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணையின்போது நடிகை பவித்ரா கவுடாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் உடனடியாக பவித்ரா கவுடாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து மீண்டும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையின் போது, பவித்ரா கவுடா தனக்கு உடல் சோர்வு ஏற்பட்டதாக கூறியதாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குளுக்கோஸ் ஏற்றி மீண்டும் காவல் நிலையம் அழைத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்