"அந்த தைரியம் இருக்கா?'' - இந்து அமைப்பு தலைவருக்கு இஸ்லாமிய பெரும்புள்ளி சவால் - கர்நாடகாவில் வெடித்த கலவரம்.. பயம்.. பதற்றம்

Update: 2024-09-16 10:38 GMT

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் மசூதியில் கல்வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் கடந்த வாரம் மாண்டியாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. அதற்கு மாற்று சமூகத்தினரே காரணம் என இந்து அமைப்பினர் குற்றம் சாட்டினர். இந்த சூழலில், பண்ட்வால் நகராட்சியின் முன்னாள் தலைவர் எம்.டி. ஷரீப் வெளியிட வீடியோவில், தக்ஷின கனடா மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சரணுக்கு தைரியம் இருந்தால், மிலாடி நபியன்று பண்ட்வால் கிராஸ் சாலையில் வர முடியுமா? என சவால் விடுத்தார். வீடியோ வேகமாக பரவ, காட்டிபல்லா பகுதியில் மசூதியில் சிலர் கற்களை வீசியுள்ளனர். இதனால் மங்களூருவில் வகுப்புவாத பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சவாலை ஏற்று பண்ட்வால் கிராஸ் சாலைக்கு வந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் சரணிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அவரை அங்கிருந்து திரும்பி போகச் செய்தனர். ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய மாவட்ட ஆட்சியர், நிலவரம் குறித்து ஆலோசித்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.....

Tags:    

மேலும் செய்திகள்