கவிழும் ஜார்கண்ட் அரசு..? MLAக்களுடன் பாஜகவுக்கு தாவும் சாம்பாய் சோரன்..? மெகா ட்விஸ்ட்
ஹேமந்த் சோரன் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்கண்டில் சுமார் 5 மாதங்கள் முதல்வராக இருந்த சம்பாய் சோரன், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் அமைச்சராக பதவி வகித்து வரும் சம்பாய் சோரன், பா.ஜ.க தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 6 பேருடன் சம்பாய் சோரன், டெல்லியில் பா.ஜ.க தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, சம்பாய் சோரன் பா.ஜ.க.வில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.