ஜி.எஸ்.டி வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பை நிறுத்திய மத்திய அரசு

Update: 2024-07-02 08:08 GMT

ஜூன் மாத ஜி.எஸ்.டி வரி வசூல் அளவு ஒரு லட்சத்து 74

ஆயிரம் கோடி ரூபாயாக, 2023 ஜூன் அளவை விட 7.7

சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மே மாத ஜி.எஸ்.டி வசூல் ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி

ரூபாயாக இருந்தது ஒப்பிடத்தக்கது. 2017 ஜூலையில்,

ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்ட பின், ஒவ்வொரு

மாதமும் முதல் தேதியன்று, அதற்கு முந்தைய மாதத்தின்

வசூல் அளவு பற்றிய முழு விவரங்களை மத்திய அரசு

வெளியிட்டு வந்தது. ஆனால் இந்த மாதம் முதல், இந்த

நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.

இதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்