ஒரு மாநிலத்தையே மிதக்க விட்ட பேய்மழை...சுனாமிபோல் ஆக்ரோசம்... அகதியான 16 லட்சம் பேர்

Update: 2024-07-05 07:45 GMT

ஒரு மாநிலத்தையே மிதக்க விட்ட பேய் மழை

சுனாமிபோல் ஆக்ரோசம் காட்டிய பிரம்மபுத்திரா

அகதியான 16 லட்சம் பேர்...நாடே மிரளும் கோரம்

46 பேரை பலியாக்கிய அசாம் வெள்ளப்பெருக்கு பாதிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

தொடர் மழையால், மாநிலத்தின் முக்கிய நதியான பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மாநிலமே ஸ்தம்பித்துள்ளது..

அதீத வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், குடிசை வீடுகளில் புகுந்த நீரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்..

வீடு முழுக்க வெள்ள நீர் சூழ்ந்ததால், கேஸ் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்களும் நீரில் மூழ்கின...

மேலும் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்ததால், அத்தியாவசிய பொருட்களை பத்திரப்படுத்த முடியாமல் தவித்தனர்..

அசாமில் உள்ள 29 மாவட்டங்களில் சுமார் பதினாறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பர்பெட்டா, பிஸ்வநாத், கச்சார், சரைடியோ, சிராங், தர்ராங், தேமாஜி, துப்ரி, திப்ருகர், கோல்பாரா, கோலாகாட், ஹைலகண்டி, ஹோஜாய், ஜோர்ஹட், கம்ரூப், கம்ரூப் பெருநகரம், கிழக்கு கர்பி ஆங்லாங், மேற்கு கர்பி ஆங்லாங், கரீம்கஞ்ச், லக்கிம், நல்பாரி, சிவசாகர், சோனித்பூர் மற்றும் டின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

மேலும் ஆயிரத்து 300 கிராமங்கள் கடும் சேதங்களை கண்டுள்ளன...

அத்துடன் இந்த மழை வெள்ளம், மலைச்சரிவு, உள்ளிட்டவற்றில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தற்போது வரையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மோசமான நிலை ஏற்பட்டது.

காசிரங்கா பூங்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காண்டா மிருக குட்டி, பன்றி, மான் உட்பட பதினேழு விலங்குகள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளன.. அத்துடன் 32 வன விலங்குகள் சிகிச்சையில் உள்ளன..

மேலும் வெள்ள நீரில் இருந்து 55 பன்றி மான்கள், 2 நீர் நாய்கள், 2 ஸ்கோப் ஆந்தைகள், ஒரு காண்டா மிருக குட்டி, காட்டு பூனை என மொத்தம் 72 வன விலங்குகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன...

இப்படி கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்..

அசாம் மட்டுமன்றி மணிப்பூரிலும் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்களின் நிலை கவலைக்குரியதாக மாறியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்