தொழிற்சாலை முழுதும் சூழ்ந்த பயங்கர தீ... 26 வாகனங்களில் படையெடுத்த வந்த ரெஸ்க்யூ டீம்
டெல்லி முந்துகா பகுதியில் உள்ள தொழிற்சாலை பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அங்குள்ள தொழிற்பேட்டையில் உள்ள ஆலை ஒன்றில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு, கொழுந்துவிட்டு தீ எரிந்தது. 26 வாகனங்களில் சென்ற தீயணைப்புத்துறையினர், தீயை போராடி அணைத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் ஏற்படவில்லை.