ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் பிரபல நடிகர்..அதிர்ச்சியில் தங்க வியாபாரி

Update: 2024-10-01 08:36 GMT

#gujarat | #fakeMoney

ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் பிரபல நடிகர்..அதிர்ச்சியில் தங்க வியாபாரி - விசாரணையில் வெளிவந்த பகீர்

பாலிவுட் நடிகர் அனுபம் கெர் புகைப்படம் இடம்பெற்ற கள்ள நோட்டுகளை தந்து, நகை வியபாரியிடம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.குஜராத் மாநிலம் அஹமதாபாத்தை சேர்ந்தவர் நகை வியாபாரி மெகுல் தாக்கர். இவரிடம் 2,100 கிராம் தங்கம் வாங்கிய இருவர் தாங்கள் கொண்டு வந்த பையில் இருந்து, 1.6 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை அவரிடம் தந்துள்ளனர். பின்னர் அந்த பணத்தை எண்ணி பார்க்க எடுத்த போது, முழுவதும் கள்ள நோட்டுகளாக இருந்தன. கள்ள நோட்டில் காந்தி படத்துக்கு பதிலாக, பாலிவுட் நடிகர் அனுபம் கெர் படம் இடம்பெற்றிருந்தது. மேலும் ரிசர்வ் பேங்க் என்பதற்கு பதிலாக, ரிசோல் பேங்க் ஆப் இந்தியா என அச்சடிக்கப்பட்டிருந்தது. கள்ள நோட்டு கும்பல் போலியான கொரியர் சேவை நிறுவனத்தை நடத்தி வந்துள்ளதாகவும் அண்மையில் ஷாகித் கபூர் இயக்கத்தில் வெளியான 'பார்சி' வெப் சீரிஸால் ஈர்க்கப்பட்டு அவர்கள் போல கள்ள நோட்டுகளை தயாரித்துள்ளனர் என்றும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்