டெல்லியில், உலகத் தமிழ் கவிஞர்கள் கலை இலக்கிய சங்கம் சார்பில், தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது வருகிறது. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும், தமிழை
உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கவும் இவர்கள் கோரியுள்ளனர். தமிழறிஞர்களின் உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசின் புது டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், ஜந்தர் மந்தரில் துவக்கி வைத்தார். தமிழ் அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.